Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அரியமங்கலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இரயில்வே நிர்வாகம் ஒப்புதல்- துரை வைகோ

 திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பதில்கொடுக்கும் விதமாக, 

கடந்த 15.04.2025 அன்று அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினேன். அப்போது, சுமார் 25,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை இரயில்வே தடத்தைக் (Railway track) பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல போதுமான அளவிற்கு சுரங்கப்பாதையை அமைக்க உண்டான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று, அன்றே தென்னக இரயில்வே திருச்சி கோட்ட மேலாளரை (DRM) அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.  

இதே கோரிக்கையை மனுவாக தயாரித்து 23.04.2025 அன்று திருச்சியில் நடைபெற்ற திருச்சி கோட்ட இரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தென்னக இரயில்வே பொது மேலாளரிடம் வழங்கி அது குறித்த தகவலை எடுத்துரைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, ஆய்வுகள் மேற்கொண்டு, அரியமங்கலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இரயில்வே நிருவாகம் ஒப்புதல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டிய பல்வேறு கட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நிலம் அளக்கும் பணியை விரைந்து நடத்தித்தர ஏற்பாடு செய்து தருமாறு திருவெறும்பூர் மண்டலக் குழு தலைவர் மு.மதிவாணன் எம்சி அவர்களிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேன். அதன்படி, இன்று (12.06.2025) அரியமங்கலம் இரயில்வே சுரங்கப்பாதைக்கு தேவைப்படும் நிலங்களை அளக்கும் பணியை நில அளவையர் (Land Surveyor) மேற்கொண்டுள்ளார். 

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய திமுக திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளரும், திருவெறும்பூர் மண்டலக் குழு தலைவருமான மு.மதிவாணன் எம்சி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நில அளவை பணிகளைப் பார்வையிட, எனது சார்பாக கழக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா. சோமு அவர்களை பணித்தேன், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *