Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தினசரி நீச்சல் பயிற்சிக்கு 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆட்சியர் அனுமதி

தினசரி நீச்சல் பயிற்சிக்கு 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு அனுமதி. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம், விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அண்ணா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது. இதில் 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.  

நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.  விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும், விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது.

பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.  விளையாட்டு பயிற்சிகளை  பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும். நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகச்கவசம் அணிதல், நீச்சல் குளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.  சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள் அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி. (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *