Site Logo mobile
Search Icon
Mobile Gif
Election 2021

திருவெறும்பூர் தொகுதிக்கு எந்தவித நன்மையும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்யவில்லை. அதிமுக வேட்பாளர் ப.குமார் குற்றச்சாட்டு

திருச்சி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி ப.குமார், திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி வாழவந்தான் கோட்டை திருநெடுங்குளம் கைலாசநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ப.குமார் அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

பின்னர் வாக்கு சேகரிப்பின் போது ப.குமார் வாக்காளர் மத்தியில் பேசுகையில்… பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்கியது தமிழக அரசு. கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் தொடர் மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக திருவெறும்பூர் தொகுதி உறுப்பினராக உள்ள திமுக-வை சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யமொழி இந்த தொகுதிக்காக என்ன செய்தார்? ஆனால் இந்த தொகுதியில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், மூடப்படாமல் இருந்த கல் குவாரிகளுக்கு என்னுடைய எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  சுற்றுச்சுவர் எழுப்பி,  உயிர்பலியை தடுத்துள்ளேன். இதுமட்டுமின்றி 2.5 கோடி ரூபாய் செலவில் மாவடி குளத்தை தூர்வாரி அதை சுற்றுலாத் தளம் போல மாற்றி உள்ளேன். ஆனால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை  என குற்றம் சாட்டினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *