Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

பெண்கள் சக்தியை நினைவுகூறும் பொன்மலை பணிமனை

திருச்சிராப்பள்ளி பொன்மலை மத்திய பணிமனை நடப்பு நிதி ஆண்டின் துவக்கத்தில் covid-19 தொற்றுநோய் அபாய சூழ்நிலையிலும் இப்பணிமனை  பெண்களின் கணிசமான பங்களிப்புடன் 500  புதிய வேகன்கள் கட்டுமான பணியை செய்து நிறைவேற்றியது.

 அகில உலகப் பெண்கள் தின கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக மார்ச் 13ம் தேதி இன்று BLCS வேகன்கள் முதல் தொகுப்பு நிறைவடைந்ததை  நினைவு கூறும் வண்ணம் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 10 பெண் அதிகாரிகள் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
 உதவி நிதி ஆலோசகர் எஸ்.பி.தேவி,உதவி தணிக்கை அதிகாரி ஐஸ்வர்யா,பணிமனையின்  முதல் பெண் ISO 9606 வெல்டராக தகுதி பெற்றவரும் மற்றும்இரண்டு வெல்டிங் நுட்பங்களிலும்   திறமை வாய்ந்தவர் சுமதிஇந்த  வேகன்களை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் உள்ள வேகன் பணிமனை பிரிவின்  மூத்த பெண் ஃபிட்டர்கள் புவனேஸ்வரி  மற்றும்ரெங்கமணி, திட்ட பொறியாளர் ராதிகா  ஒப்பந்தங்களுக்கான பொறியாளர் ஜே கவுதமி , மூலப்பொருட்கள் கொள்முதலில் முனைப்பாய் செயல்படும் வனஜா  , மனித வள நிபுணர் எம்.எஸ் சீலா  மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை மகளிர் காவலர் சுதா ஆகியோர் இந்த சிறப்பு விருந்தினர் பட்டியலில் அடங்குவர்.
 இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திருச்சிராப்பள்ளி ரயில்வே டிவிஷன் சேர்ந்த மகளிர் லோகோ ஓட்டுநர்கள் ஜான்சிராணி மற்றும் என் நந்தினி ,லோகோ ஆய்வாளர் நாராயண வடிவு,பிரேக் கார்ட் வேனில்மகளிர் கார்டு  நீலாதேவி ஆகியோர்  இந்த புதிய வேகன்களை இயக்கியது குழுமியிருந்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இந்திய கொள்கலன் கார்ப்பரேஷன் வழங்கிய புதிய 1035 வேகன் ஆர்டரின்  ஒரு பகுதியாக  முதல் வேகன்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.

 இரண்டு அடுக்குகள் கொண்ட கொள்கலன் வகை வேகனின் (BLCS) முக்கிய அம்சங்கள்:
 இவை 25 டன் எடையை தாங்கும் அளவிற்குஅச்சுகள்  பொருத்தப்பட்டுள்ளன .
100 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த வேகன்களின் கண்காணிப்பு ரேடியோ அதிர்வெண் அடையாள வில்லை பொருத்தப்பட்டுள்ளது இதன் வாயிலாக சரக்கு போக்குவரத்து செயல்பாட்டில் பயனுள்ள மற்றும் வெளிப்படையான செயல்பாடு உறுதி செய்யப்படுகிறது.

 தடையற்ற எஃகு குழாய்களுடன் இரட்டைக்குழாய்  ஏர் பிரேக் முறை செயல்படுவதன் மூலம் ரயில் வண்டி ஓட்டுநர்கள்ரயில்  இயக்கத்திற்கு தேவையான வேகக்கட்டுப்பாடு செயலாற்ற உதவுகிறது.
எளிதான இயக்கத்திற்காக சென்டர் பப்பர் கப்லர் (center buffer coupler)இணைக்கப்பட்டிருக்கின்றன . அகில இந்திய அளவில் ஜூலை 2020sBLCS  வேகன்களை தயாரித்த முதல் நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே இந்த மேம்பட்ட வேகன்களின் மூல முன்மாதிரியை வெற்றிகரமாக முடித்த நம் நாட்டின் ஒரே பணிமனை என்ற பெருமையும் பொன்மலை பணிமனையை  சேரும்.

 இந்த விழாவில் முன்னதாக முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் மற்றும் மூத்த அதிகாரிகள்  பணிமனையில் பெண் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர்.
 இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்து பெண் ஊழியர்கள் சிறப்பு பலகையில் கையெழுத்திட்டு தங்கள் உறுதியை காண்பித்தது முக்கியமான நிகழ்வாகும் இந்த கையொப்பமிட்ட சிறப்பட்டை பணிமனையில் நினைவுப் பொருளாக காட்சிப்படுத்தப்பட உள்ளது  .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *