திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஶ்ரீரங்கம் தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக வேட்பாளர் கு.ப கிருஷ்ணனுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments