Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக நலத்திட்ட உதவிகள்!!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் நல் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு அறப்பணிகள் நடந்தேறி வருகின்றது. வெளிநாடுகளிலும் இக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கின் காரணமாக அரசுப் பொது மருத்துவமனையில் நோயாளியுடன் இருப்பவர்களுக்கும், சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும் தினமும் 200 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் அதனின் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்குட்பட்ட ஏழை எளிய அன்றாட கூலித் தொழில் செய்து வரும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் அம்மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 500 குடும்பங்கள் தெரிவுச்செய்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனை 07.04.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் A. K. காஜா நஜீமுத்தீன், பொருளாளர் M. ஜமால் முகமது, முதல்வர் S. இஸ்மாயில் முகைதீன், கல்லூரி விடுதி இயக்குனர் K. N. முஹம்மது பாசில், விடுதி ஒருங்கிணைப்பாளர். சையத் அலி பாதுசா, நல் உள்ளங்கள் அறக்கட்டளை பேரா. H.E.சையத் முகமது, பேரா. பா. சிராஜூதீன், பேரா. ஜாஹிர் உசேன், சகோ.சதாம்., சமூகசெயற்பாட்டாளர். முகமது பிலால் பாகவி, நைனார் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக 15 குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாக செயலர் மற்றும் தாளாளர், பொருளாளர், முதல்வர், விடுதி இயக்குனர் நிவாரணப் பொருட்கள் கொடுத்து துவங்கி வைத்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *