Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஹோலி கிராஸ் கல்லூரியில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஹோலி கிராஸ் கல்லூரியில் மகளிரியல் மையமானது இன்று மாணவர்களுக்கு பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.  மகளிரியல் மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரசுவதி அனைவரையும் வரவேற்றார் .

கலைக்காவேரி கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் பாலின சமத்துவம் உரிமைகள் பொறுப்புகள் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். 90 சதவீதம் பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை வளர்ப்பு பழக்கவழக்கங்களால் தங்கள் வேலையை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவித்தார் .
வட அமெரிக்காவில் 158 ஆண்டுகளுக்கு பிறகு பாலின சமத்துவத்திற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

 தமிழ் சமூகத்தின் தனித்துவமான பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலோடு புரட்சி கலைஞர் பாரதியார்,பாரதிதாசன், பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின்  படைப்புகளை மேற்கோள் காட்டிப் பேசினார். 
பாலின சமத்துவம் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க செய்யும் ஒரு காலத்தின் தேவையாகும்.

 இது நிலம் ,உழைப்பு ,மூலதனம் கல்வி ,அரசியல் பங்கேற்பு,முடிவெடுக்கும் அதிகாரம்கொண்ட அறிவுசார் வளங்களுக்கு சமமான அணுகலை வழங்குகிறது.மதம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆணாதிக்கம் நிலவுகிறது.
 சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாலின மைய நீரோட்டம் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் செய்யப்படவேண்டும் .

இந்நிகழ்வில் பார்வை தொடர்பு, உளவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்ந்த 25 மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவம் தொடர்பான தமிழ் இலக்கியம் படிக்க தூண்டப்பட்டு பயன் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக கூறினர் .
பின்னர் சமூகப் பணி மாணவர் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *