இந்தியாவின் முதன்மை மாவட்டமாக திருச்சியை உருவாக்கிட வேண்டுமென்று தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் திருச்சி தொழில்முனைவோர்கள். மணப்பாறையில் 1077 ஏக்கரில் அமைய உள்ள ஃபுட் கோர்ட்டில் டெல்டா மாவட்ட ஃபுட் கோர்ட் அதிக அளவில் அமைத்திட வேண்டும்.
பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சுமார் 50 ஏக்கரில் அமைத்திடல் போன்ற கோரிக்கைகளை குறித்து திருச்சி டிரேட் சென்டர் சேர்மன் கனகசபாபதி கூறியதாவது, கிட்டத்தட்ட 23 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை சட்டமன்ற வேட்பாளர்களிடம் முன் வைத்துள்ளோம் .
கனகசபாபதி
அதில் குறிப்பாக திருச்சி ரிங்ரோடு வேலைகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
ஒவ்வொரு தாலுகாவிலும் Cold storage அமைத்தல் ,முசிறி பகுதி கோரைப்பாய் ஏற்றுமதியில் அதிக அளவில் செய்திட கோரைப்பாய் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சிறிய சிட்கோ அமைத்து தருதல், முசிறி மற்றும் மணப்பாறை பகுதிகளில் உள்ள பால் மற்றும் பால் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஒரு கிளஸ்டர் அமைத்து தருதல்.
Advertisement
திருச்சி ஏர்போர்ட்டில் தற்போது பயணிகள் பயணிக்கும் விமானங்களில் 25 டன் food items மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. cargo வில் 100 டன் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.TIDES உறுப்பினர் யோகேந்திரன் கூறுகையில் திருச்சி நவல்பட்டில் செயல்பட்டுவரும் எல்காட் ஐடி பார்க் போக்குவரத்து வசதிகள் குறைவாகவே இருக்கின்றன எனவே அதனை விரிவுபடுத்தவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments