திருச்சி மாநகராட்சி 30 கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் மற்றும் சாலை சீரமைக்கும் திட்டத்தை தொடங்க இருக்கின்றனர். 50 கிலோ மீட்டர் அளவே புதிய சாலைகள் அமைக்கும் திட்டமும் , பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 156 ரோடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு சாலை திட்டத்தில் மக்களின் போராட்டத்திற்கு பிறகு கைலாஷ் நகர், நியூ டவுன் முத்துநகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் சாலை சீரமைக்கும் பணி திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.
மேலும் ஆயில் மில் ரோடு, பாப்பா குறிச்சி ரோடு, திருச்சி ஜங்ஷன் ROB சர்வீஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் சண்முக நகர சாலைகளில் புதிய சாலைகள் அமைத்திட தேர்வு செய்துள்ளனர். பழுதடைந்துள்ள காந்தி மார்க்கெட் சாலை, காந்தி சிலை அருகே மணிமண்டபம் சாலை ஆகிய இடங்களிலும், ஸ்ரீரங்கம் மற்றும் அரியமங்கலம் தொகுதிகளிலும் புதுப்பித்தல் பணியை செய்ய உள்ளனர். இப்பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments