Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி B.G  நாயுடு ஸ்வீட்ஸ் சார்பாக செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்!!

திருச்சியில் 112 வருடங்களாக விழாக்காலங்களில் என்றாலும் சரி, வீட்டு விசேஷங்கள் என்றாலும் சரி, பள்ளிகள் நிறுவனங்கள் கல்லூரிகள் என அனைத்திலும் முன்னணியாக இருப்பது நம்முடைய திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ் தான். காலங்கள் மாறினாலும் இதனுடைய சுவையும் தரமும் இன்றளவும் மாறியதாக தெரியவில்லை.

இது இனிப்பு கடை மட்டுமல்ல பலருடைய வாழ்க்கையை இனிக்க வைத்த கடைதான் இன்றளவும்.அதற்கு ஏற்றார் போலவே இந்த கொரோனா நோய்த்தடுப்பு நிவாரணமாக திருச்சி செய்தியாளர்களுக்காக தலா அரிசியை 5 கிலோ, சர்க்கரை 1 கிலோ துவரம் பருப்பு 1 கிலோ, உருட்டு உளுந்து 1 கிலோ, உப்பு 1 கிலோ, மஞ்சள் தூள், மிளகாய் தூள் கடுகு, கிராம், மல்லித்தூள், மஞ்சள்தூள், சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவை 100 கிராம், கோதுமை மாவு 1 கிலோ பொட்டுக்கடலை, சேமியா 200 கிராம், அப்பளம் 1 பாக்கெட், உருளைக்கிழங்கு 1 கிலோ, பெரிய வெங்காயம் 1 கிலோ, பிளைன் கேக் 200 கிராம், ஸ்வீட் பிரட், காராச்சேவு ஆகிய 22 பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை செய்தியாளர்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் B.G நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் உரிமையாளர் B.பாலாஜி மற்றும் B.சாராநாத் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் செய்தியாளர்களுக்கு வழங்கினர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *