Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன் கு ப கிருஷ்ணன் உறுதி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் கு ப  கிருஷ்ணன், தொடர் பிரச்சாரமாக கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள நூர் மஸ்ஜீத் பள்ளிவாசல் மற்றும் பெட்டவாய்த்தலை உள்ள ஜாமீ ஆ மஸ்ஜீத் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு சென்று முஸ்லிம் சகோதர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான முஸ்லிம் பிரேதங்கள் அடக்கம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் 500க்கும் மேற்பட்ட பெண்களிடம், வாக்கு சேகரித்த பொழுது, சுயஉதவி கடன்களையும், 6 பவுன் வரை நீங்கள் வாங்கிய நகைக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உட்பட பெண்களுக்கு அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல திட்டங்களை எடுத்துக்கூறி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் திருவானைக்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்யும் பொழுது தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணியை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அதேபோல ஸ்ரீரங்கம் தொகுதியில் மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பணி செய்திட தனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும் அதிமுக அரசு மக்களுக்கு வசந்த காலத்தை கொடுத்து வருகிறது என்றும், நீர் மேலாண்மையில் முதன்மையிடம் பெற்றுள்ளது என்றும், தமிழக மக்கள் வாழ்வாதாரம் பெருகிட, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம் என்றும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500 வங்கி கணக்கில் செலுத்துவோம் என்றும், வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் என்றும், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை கூறி  அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் வாக்குகளை சேகரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *