Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்தியாவிலேயே மகளிர்கான அதிக திட்டங்களை கொண்டு வந்த மாநிலம் தமிழகம் தான் ஜி. கே வாசன் பேச்சு

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி அதிமுக கூட்டணி த.மா.கா வேட்பாளர் தர்மராஜை ஆதரித்து லால்குடி அருகே வாளாடி, லால்குடி, நடராஜபுரம், பூவாளூர் உள்ளிட்ட பகுதிகளில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஜி.கே. வாசன்…. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்களுக்கு தேவை. அந்த திட்டங்களை கொடுக்க சரியான பிரதிநிதி இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுக்கு பாலமாக இருக்கக் கூடிய கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.

த.மா.கா பிரதிநிதியால்  மத்திய, மாநில அரசின் திட்டங்களை 100 சதவீதம் இந்த தொகுதிக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நகரம் முதல் கிராமம்  வரை திட்டங்களை கொண்டு போய் சேர்க்க கூடிய வேட்பாளராக தர்மராஜ் போட்டியிடுகிறார்.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் 
சாமனிய மக்களின் எண்ணங்களை புரிந்து, அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததனால் தான் 3 வது முறையாக அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மகளிருக்கான அதிக திட்டங்களை கொடுத்ததலில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. மக்களின் சுமையை குறைக்க வேண்டும், கஷ்டங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது.

இலவசமாக கொடுக்க மனம் இருந்தால் மட்டும் போதாது. நல்ல குணமும் வேண்டும். திமுகவிடம் இல்லாத மனமும், குணமும்  அதிமுகவிடம் உள்ளது. அதிமுகவிற்கு வாக்களித்தால் வளர்ச்சி தரும், வாழ்வு தரும் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது தமாகா, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *