திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோதம்பட்டி, கஸ்தூரிப்பட்டி, சாதம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த் தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக கதிரவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பி.பி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேட்பாளர் கதிரவன் முன்னிலையில் ரத்த தானம் கொடுத்தனர்.
அப்போது நான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என கதிரவன் வாக்குறுதியளித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments