மக்கள் சக்தி இயக்கம், சாமி தற்காப்புக் கலைக்கூடம், ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பும் இணைந்து 02.04.2021 மாலை 5.30 மணியளவில் 100% வாக்களிப்போம் ஜனநாயகக் கடமை ஆற்றுவோம் என்ற விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேர தொடர் உலக சாதனை சிலம்பாட்டம் நிகழ்வை பொன்மலை ரயில்வே மைதானத்தில் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் தலைமையில் சாமி தற்காப்புக் கலைக்கூடம் ஆசான் ஜீவானந்தம் அவர்களின் 50 சிலம்பாட்ட மாணவர்கள் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பாட்டம் நிகழ்த்தி பொதுமக்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வூட்டினர்.
நிகழ்வில் வாக்களிப்போம் ஜனநாயக கடமை ஆற்றுவோம் என்ற தலைப்பில் கலைக்காவிரி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் தொடக்கவுரையாற்றினார்.
ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் நிறுவனர் ஜெட்லி, மற்றும் நடுவர் அபிராமி ஆகியோர் தொடர் சாதனை சிலம்பாட்ட நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.
எனது வாக்கு எனது உரிமை , என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் பொது மக்களிைடையே விழிப்புணர்வு பரப்புரை பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் குண்டூர் லலிதா, பொன்மலை தரணி, சிவகாமி, பண்பாளர்கள் ஆசிரியை புஷ்பலதா பாலாஜி, எம் கணேஷ், என்.தயானந்த், பி.ரஞ்சித், என்.வெங்கடேஷ், டி.சிவகாமி, டி.சகானஸ்ரீ ,மே.க.கோட்டை ஈஸ்வரன், டி.தர்ஷனா சீனிவாசன்,ப்ரீத்திஷா, கவிதா சுரேஷ், சந்திரசேகரன்,லோகநாதன் உள்ளிட்ட பொதுமக்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.அபிராமி நன்றி கூறினார்.
தொடர் சாதனை சிலம்பாட்டம் நிகழ்த்திய மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments