Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சி அமைப்பினர் திண்டுக்கல் மாவட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி!! வெறும் வண்டியாக திரும்பி அனுப்ப மனமில்லாமல் சௌ சௌ காய்கறியை அனுப்பி வைத்தனர்!!!

நமது திருச்சி மாவட்டத்தில் ShineTREEchy என்னும் அமைப்பு நமது திருச்சி மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும், சமுதாய தொண்டுகளையும் செய்து வந்தனர். இந்த கொரோனா நோய் காலகட்டத்திலும் நிவாரண பொருட்களை திரட்டுதல், அவற்றை வறுமையால் வாடும் மக்களை கண்டறிந்து கொண்டுபோய் வழங்குதல் என பல வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளர் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல தன்னார்வலர்கள் மற்றும் ShineTREEchy சார்பாக அரிசி பொருட்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிறுமலை மலைப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளர் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைதளம் வாயிலாக கரோனா பாதிப்பு காலத்தில் தங்களது வாழ்வாதாரம் இல்லாத நிலையில் சமூக வலைதளம் வாயிலாக உதவி கோரி இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் சார்பாக திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று (9-5-2020) நேரில் சென்று அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி (₹.700) அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. பொருட்கள் வழங்கப்படும் போது அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சமூக இடைவெளியிடனும், முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி திரவம் கொண்டு கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பொருட்கள் தொகுப்பு 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இத்தொகுப்பில் அரிசி ஐந்து கிலோ, துவரம் பருப்பு, சர்க்கரை , கோல்டுவின்னர் எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார் தூள்,மல்லித்தூள், டீ தூள்,வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, சால்ட் உப்பு, கோதுமை,விம்சோப்பு, ரின் சோப்பு, ரவை, மிளகாய் , கொண்டகடலை
உட்பட் 20 பொருள்கள் இருந்தன . மேற்கண்ட மளிகைப்பொருட்கள் இன்று நேரில் சென்று சிறுமலை மலைவாழ் மக்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

அத்தியாவசிய அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த மலைப்பகுதி மக்கள் தன்னார்வலர்கள் சென்ற வாகனத்தில் தங்கள் பகுதியில் விளைந்த சௌ சௌ காய்கறி மூன்று மூட்டைகள் கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் மணப்பாறை சிப்காட் வட்டாட்சியர் கோகுல், ShineTREEchy அமைப்பின் நிறுவனர் மனோஜ் தர்மர், சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் , ஆசிரியர்கள் குழந்தைசாமி, பெர்ஜித்ராஜன், மற்றும் ஜோசப், InOut சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *