Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சட்டமன்ற தேர்தல் அன்று வாக்களிக்க இலவச சேவை வழங்கும்” ஊபர் ”  

ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயக கடமையை செயல்படுத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லத்தில் இருந்த அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர “ஊபர்”நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்துடன்  இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

எனவே  வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ல் இலவச சவாரி சேவையை சென்னை,கோயம்புத்தூர்,
திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களில் “ஊபர்” நிறுவனம் வழங்க உள்ளது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் (80 வயதிற்கு மேற்பட்டவர்கள்) அவர்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில் இலவச சவாரியானது  குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணக்கட்டண  அளவில் ரூபாய் 200 வரை 100 சதவீத கட்டண தள்ளுபடி அளிக்கப்படும்.

வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *