Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரூ 9 கோடி குத்தகை செலுத்தாததால் திருச்சி யூனியன் கிளப் இடிப்பு – மாவட்ட நிர்வாகம் அதிரடி

திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையில் யூனியன் கிளப் 1907 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிலையில் 6.2.2021 அன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக மதுபான வகைகளுடன் சூதாட்டமும் நடைபெற்றதை சோதனையில் கண்டறியப்பட்டது. அப்போது மதுபானங்கள்,பணம் பறிமுதல் செய்யப்பட்டது .2 பேரை பிடித்து வருவாய்த்துறையினர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. 

1971ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திற்கு குத்தகை பணம் செலுத்தவில்லை தொடர்ந்து நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தப்பட்டது ஒவ்வொரு வருடமும் குத்தகை பணத்தை செலுத்தி புதுப்பிக்க வேண்டும் தொடர்ந்து நோட்டிஸ் கொடுத்தும் குத்தகைப் பணம் செலுத்தாமல் இருந்தனர்.

 இந்நிலையில் இன்று  காலை  யூனியன் கிளப் குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட நிர்வாகம் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில்  டிஆர்ஓ பழனிக்குமார்,  கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் அதில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி இடிக்கும் பணியை துவங்கி உள்ளனர்.

1971 இல் இருந்து 51 வருட காலமாக குத்தகை பணம் 9 கோடி ரூபாய் செலுத்தவில்லை. மேலும் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதையடுத்து இடித்து 1.5 ஏக்கர் பரப்பளவு இடத்தை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *