திருச்சிக்கு மலைக்கோட்டை பழமையாக பெருமை சேர்ப்பது போல் அந்த வரிசையில் ராமகிருஷ்ணா, முருகன் போன்ற சினிமா டாக்கீஸ்கள் இருந்தன.
தொழில் முடக்கம் வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன.50 ஆண்டுகளுக்கும் மேலான ராமகிருஷ்ணா தியேட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.
அதேபோல் பல தியேட்டர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் வரி பாக்கி நிலுவை வைத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் 9 கோடி ரூபாய் (குத்தகை)வாடகை பாக்கி வைத்து இருந்த நூறு ஆண்டுகள் பழமையான யூனியன் கிளப் கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த வரிசையில் கீழப்புலிவார் ரோட்டில் உள்ள முருகன் டாக்கீஸ்யை தற்போது திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் மறைந்த புனிதவல்லி பழனியாண்டியின் மகன் சுரேஷ் மற்றும் நண்பர்கள் கூட்டாக திரையரங்கை நிர்வகித்து வந்துள்ளனர்.
99 வருடம் (லீஸ்) குத்தகை வருவாய் துறையிடம் அனுமதிபெற்று தியேட்டர் இயங்கிவந்தது .முதலில் மாதம் 12,000 ரூபாய் என (குத்தகை) வாடகை பணம் நியமிக்கப்பட்டது .2009 வரை வாடகை நிலுவையில் இல்லாமல் அனைத்தும் கட்டப்பட்டதாக தியேட்டர் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.
தற்போது மாநகராட்சி அதிகரிகள் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி என தெரிவித்து மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் முருகன் டாக்கீஸ்க்கு சீல் வைத்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பேச்சு வார்த்தை நடத்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments