திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் – மணிமேகலை இவரது மகன் அருண்குமார். இவரது நண்பர்கள் யாசர் அராபத், பீர்முகமது ஆகிய இருவரும் அருண்குமாரை பப்ஜி விளையாட்டை போல உள்ள ஃப்ரீ பையர் வீடியோ கேம் விளையாட அழைத்தனர். இதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் யாசர் அராபத்தும், பீர் முகம்மது சேர்ந்து அருண்குமாரை தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு சென்ற அருண்குமார் தாய் மணிமேகலையும் தாக்கினர்.
இதில் காயமடைந்த இருவரும் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து 2 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments