Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடிகர் விவேக் மறைவிற்கு திருச்சியில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி

No image available

பத்மஸ்ரீ சின்னக்கலைவாணர் திரைக்கலைஞர் விவேக் மறைவையொட்டி திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisement

விவேக் அவர்களின் கனவான மரக்கன்று நடுவோம் மண் வளம் மீட்போம் என்ற கனவை நனவாக்கும் விதமாக அரச மரக்கன்றுகள் நட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

சமூக சீர்திருத்தக் கருத்துகள் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை திரையில் நகைச்சுவை வாயிலாக கலைவாணருக்குப் பிறகு மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த சிறந்த மக்கள் கலைஞர் விவேக். அவருக்கு மக்கள் சக்தி இயக்கம், மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற கோட்பாட்டின்படி அவர்கள் விரும்பிய பசுமை தமிழகத்தை ஏற்படுத்தும் நோக்கமாக மரக்கன்று நட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.     

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று செந்தண்ணீர்புரம் பகுதியில் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவிற்கு மரக்கன்றுகள் நட்டு திரைத்துறையிலும் மக்கள் நலப் பணிகளும் அவர்செய்த சேவைகளை எடுத்துக்கூறி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisement

இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில துணை செயலர் வெ.இரா .சந்திரசேகர்,மாவட்டப் பொருளாளர் ஆர்.வாசுதேவன், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க மகளிர் அணி நிர்வாகி தரணி, சூரியமூர்த்தி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் சந்தாகுமார், தியாகராஜன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *