Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இறுதி அஞ்சலி செலுத்த இடமளித்து உதவிய அன்பாலயம்

No image available

மனிதனின் வாழ்க்கை முழுவதும் அவன் சேகரிக்கும் புகழ், பணம் எல்லாவற்றையும் அவருடைய மரணத்திற்குப் பிறகு நிகழும் நிகழ்வுகள் அவனை யார் என்று உலகிற்கு பறைசாற்றும். ஆனால் தன்னுடைய இறுதி சடங்கில் கூட தன்னை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு கூட இயலாத நிலையை வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு அசாத்திய சூழ்நிலையாக இருக்கிறது. பலரும் கண்டு கொள்ளாத ஏன் கவனிக்க  இயலாத  நிலையை என்னவென்று கூறுவது. திருச்சியில் வாடகை வீட்டில் வசித்த ஒருவருக்கு அவருடைய இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அவ்வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காத போது உதவி கரம் நீட்டியது அன்பாலயம்.

கிராமத்திலிருந்து பிழைப்பிற்காக வெளியூர் வந்து வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அவ்வீட்டில் நிலவும் அசாத்திய சூழ்நிலைகளை ஏற்பதற்கான மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அப்படி ஒரு மனிதனின் மரணத்தின் உண்மை சம்பவத்தை ஒரு குறும்படமாக எடுத்து இருக்கிறார்கள். “பெரிய காரியம் “என்று பெயரில் வெளியாகியுள்ள இக்குறும்படம் பார்ப்பவர்களை வருந்த  செய்வதோடு சிந்திக்கவும் செய்யும்படி அமைந்திருக்கிறது.

இதனைப்பற்றி அன்பாலயத்தின் உரிமையாளர் செந்தில் கூறுகையில்…. நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை பசியில் இருப்பவர்களுக்கு உணவளிப்பது எப்படி ஒரு உதவியோ அதே போன்று தானே இடமில்லை என்றதும், இடமளித்து நான் உதவி செய்தேன் அன்றைக்கு இரவில் தன் தந்தையை இழந்து அவர்கள் போராடிய போர்க்களத்தில் இதைவிட உதவுவதற்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தேன். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் அசாத்திய சூழலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இதை குறும்படமாக தயாரித்துள்ளோம். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வசனம் ஒன்று இருக்கிறது

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்  இங்கு இருக்கின்றனர்  இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்கும் பொழுது ஒரு வசனம் அதில் வரும் மனிதனை மனிதன் புரிந்துகொள்ளாமல். இருக்கிறானோ அவனே மனநலம் பாதிக்கப்பட்டவன். யாருக்குமே துன்பம் அளிக்காமல் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நாம் மனநோயாளி என்று கூற முடியும் என்ற வசனம். இவை எவ்வளவு வலிமையான வார்த்தைகளை உள்வாங்கி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே குறும்படத்தின் நோக்கம். மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமையட்டும் என்று தான் இதனை குறும்படமாக வெளியிட்டோம் என்கிறார்   செந்தில்குமார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *