திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேர் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 2 கோடி வரை மோசடி செய்துவிட்டனர்.
ஆகவே இது குறித்து விசாரித்து உங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தலா 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை என பல்வேறு தொகைகளை ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி உள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக சீட்டு சேர்ந்து பணம் கட்டி வந்த எங்களிடம் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி பெண்களிடம் நகைகளை வாங்கிச் சென்றனர்.
இதனையடுத்து அந்த 4 பேரும் 2 கோடி அளவுக்கு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்ட நாங்கள் ஏற்கனவே மூன்று மாதத்திற்கு முன்பு காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments