உலகம் முழுவதும் நேற்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் தன்னார்வலர்கள் பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக சூரியன் எஃப் எம் வானொலி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி சூரியன் எப்எம்ல் ரேடியோ ஜாக்கிகள் இணைந்து 8 மரக்கன்றுகளை வளாகத்தில் நட்டு உலக பூமி தினத்தை கொண்டாடினர். தற்போது உள்ள இயற்கை சூழ்நிலையில் மரங்கள் மனிதனுக்கு மிக முக்கியமானவை.
முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த அப்துல் கலாம் வார்த்தை நிறைவேற்றும் விதமாக அடுத்த தலைமுறை காக்க கூடியவை என்ற விழிப்புணர்வுடன் இந்த மரக்கன்றுகள் நடப்படுகிறது. மரங்கள் மனித உயிரை காக்கும் எனவும் பூமி தினத்தில் மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments