தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரில் குப்பை இல்லாத நிலையை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குப்பை கிடங்கை அகற்றுவதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.
வீட்டில் சேகரித்து வைத்துள்ள குப்பைகளை நேரடியாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் சேகரிக்கின்றன. இதுமட்டுமின்றி வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு மாநகரட்சி கோட்ட வார்டுகளில் உர தயாரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் சேகரித்து வைத்திருக்கும் குப்பை சேகரிக்க மாநகராட்சி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதில் மக்கும், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து பெறப்படுகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் மன நிறைவோடு செய்தாலும் அவர்களுக்கு ஏற்படும் சிரம்மங்கள் ஏராளம். குறிப்பாக குப்பைகளை சேகரித்து செல்லும் வாகனங்களில் அதிகளவு ஏற்றி செல்லும் போது வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதும், குப்பைகள் சிதறி சாலைகளில் கிடப்பது காணமுடிகிறது.
இதுமட்டுமின்றி குப்பைகளை கொண்டு வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் குப்பையின் அளவு அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப பெரிய வாகனத்தை பயன்படுத்த வேண்டும் அல்லது வாகனத்திற்கு ஏற்ப குப்பைகளை பெற வேண்டும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments