Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

20 ஆண்டுகளுக்கு பிறகு கோடைகால சாகுபடி மகிழ்ச்சியில்  திருச்சி விவசாயிகள் 

பருவநிலை  மாற்றத்தால் எப்போதும்  முதலில் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்தான்.

இந்த முறை விவசாயிகளுக்கு அதுவே நல்ல ஒரு விளைச்சலையும்  மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஜனவரி மாதம் பெய்த மழையால் கிட்டத்தட்ட 33 சதவீதம் சம்பா சாகுபடி மழையால் வீணாகியது. ஆனால் அதுவே இன்றைக்கு ஒரு வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பெய்த மழையால் கிட்டத்தட்ட 70% பாசனத்திற்கு தேவையான நீர் கிடைத்து டெல்டா அல்லாத பகுதிகளில்  இன்று விவசாயத்திற்கு பயன்படும் அளவிற்கு   நீர்  கிடைத்துள்ளது. ஆண்டின் இரண்டாம் பகுதியிலும் குறுவை முதல் தாளடி வரையான  பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெற்று கொண்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு நவரை  பட்டம் வரை நீர்வரத்து இருந்ததால் 2000 ஹெக்டேர் அளவிற்கான நவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் மணப்பாறை வறண்ட பகுதிகளில் ஒன்றாகும் .இங்கு வருடத்தில் ஒரு போகம்  சாகுபடி  செய்யும் பொழுதே கடினமான சூழல் ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்டு 20 ஆண்டிற்கு பிறகு இரண்டாவது பட்டமும் விதைத்துள்ளோம்.
 கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எங்கள்  பாசனத்திற்கான கிணற்றில் நீர் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது 10 அடிக்கு மேல் நீர் இருக்கிறது. இதனைக் கொண்டே இந்த ஆண்டு நவரை பட்ட சாகுபடி  தொடங்கியுள்ளோம்  என்கிறார் மணப்பாறையை சேர்ந்ந விவசாயி ராஜா. 
இதேபோன்று எண்ணெய் விதைகள், எள்ளு, சூரியகாந்தி பூ, கருப்பு உளுந்து ஆகியவைகளும் சாகுபடியில்  மகசூல்  அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *