திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.தற்போது கோவிட் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் முக்கிய மாநிலங்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே நாட்டின் அவசர அவசிய தேவையை கருதி, திருச்சி பெல் நிறுவனத்தில் மணிக்கு 140 மெட்ரிக் க்யூப் ஆக்ஸிஜன் தயாரிக்கும் திறன் கொண்ட செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை உடனடியாக இயக்க வேண்டும்- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு திமுக எம்பி திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments