Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசிய கல்லூரி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசியக் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறையும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்திற்கான சிறப்பம்சம் குறித்து தேசிய கல்லூரியின் நுண்ணுயிரியல்   துறையின், துறை தலைவர் ஜாபீர்  கூறியதாவது…. இந்தியாவிலேயே வாழை ஆராய்ச்சிக்காண சிறப்பு மையம் திருச்சியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அங்குள்ள தொழில்நுட்பங்களும்  உயர்தரமான ஆய்வுக் கூடங்களும் எங்கள் கல்லூரியில் இளங்கலை முதுகலை மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான வகையிலும் இன்னும் பயிற்சிக்கான சிறப்பம்சமாக அமையும் என்பதற்காகவே ஒப்பந்தமானது கையெழுத்திடட்டுள்ளது.

ஒப்பந்தம் ஆனது 5 ஆண்டுகளுக்கு கையெழுத்திப்பட்டுள்ளது. 2011 இல் இருந்து  முதுகலை மாணவர்கள்  நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வுசெய்யப்படுகின்றனர். உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் நேஷனல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அமைப்பு இணைந்து வழங்கும் உதவித்தொகையின் பெயரில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

என் ஆர்சி பி (NRCB)ல் பணியாற்றும் விஞ்ஞானிகளும் எங்கள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எந்த  பிரிவுகளில் ஒருமித்து பணியாற்ற சாத்திய கூறுகள் இருக்கின்றனவோ அதில் இணைந்து பணியாற்றுவதற்கான கலந்தாலோசனை  நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மூலக்கூறு உயிரியல் வைராலஜி  போன்ற பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகப்பெரும் எதிர்காலம்கிடைக்கும். இதை போன்று அழகப்பா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையொப்பமிடுதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *