Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகராட்சி அலுவலகம் முன்பு வெட்டப்பட்ட மரம் காரணம் என்ன

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். மரம் இயற்கையின் வரம் இது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கேட்டிருப்போம். இதுமட்டுமின்றி மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மரங்களை வெட்டுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெளியே செல்லும் வாயிலில் மரம் வெட்டப்பட்டு உள்ளது. மாநகராட்சி அலுவலகம் முன்பும், உள்புறமும் மரங்கள் நிறைந்த பசுமையாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.

ஆனால் மாநகராட்சி முன்பு சாலை ஓரத்தில் உள்ள மரம் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யார் மரத்தை வெட்டினார்கள், எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து முறையான தகவல் தெரியவில்லை.

ஒருவேளை மரத்தின் மேல் மின் கம்பிகள் செல்வதால் பாதுகாப்பு காரணம் கருதி மரத்தின் கிளைகளை வெட்டி இருக்கலாமே தவிர மரத்தையே வெட்ட வேண்டிய அவசியம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படும் இந்த  சூழ்நிலையில் இயற்கை அளித்த மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *