Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கர்நாடக பெண் கொலை திருச்சி இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எல். அபிஷேகம் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் கடந்த 22ம் தேதி 47 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை லால்குடி போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அங்கே துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆதார் அட்டையை வைத்து லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொலையான பெண் கர்நாடக மாநிலம், பன்ட்வால் பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி ராஜேஸ்வரி (47) எனத் தெரியவந்தது. கோயம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ராஜேஸ்வரி வேலை பார்த்து வந்த போது திருச்சி திருவளர்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிங்கராயர் மகன் பாஸ்கர் (32) ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் கீழவெளியூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேஸ்வரி மீண்டும் கோவைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே பாஸ்கர் செல்போன் மூலம் ராஜேஸ்வரிக்கு நாகராஜ் அடிக்கடி தொடர்பு கொண்டதால் பாஸ்கருக்கு ராஜேஸ்வரிக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது இந்நிலையில் கடந்த 21ம் தேதி திருச்சிக்கு வந்த ராஜேஸ்வரியை பாஸ்கர் கல்லணைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பின்னர் இருவரும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அபிஷேகம் பகுதிக்கு சென்ற போது நாகராஜ் மீண்டும் ராஜேஸ்வரிக்கு போன் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் ராஜேஸ்வரி கட்டையால் தலையில் அடித்துக் கொன்று கொலை செய்துவிட்டு அவர் நகை, செல்போன் மற்றும் பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரியின் செல்போனில் பாஸ்கர் தனது சிம்கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ராஜேஸ்வரியின் செல்போன் ஐஎம்இஎன் மூலம் ஆய்வு செய்த போலீசார் கீழே வெளியூரில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் பாஸ்கரை பிடித்து கைது செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *