திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் யாரோ நேற்று தீ வைத்துள்ளனர். இதனால் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினிக்கும் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லால்குடி தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. பல மணி நேரத்துக்கு பிறகு புகைமூட்டம் குறைந்தது. குப்பை கிடங்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
Comments