இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை மூடப்படுகிறது. அதன்படி திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படாது.
இந்த நாட்களில் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருவதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்து விண்ணப்பதாரர்களின், முன்பதிவு தேதி பிறகு மாற்றி அமைக்கப்படும்.
மேலும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, போலீஸ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800-258-1800, தொலைபேசி எண்கள் 0431-2707203, 2707404 மற்றும் வாட்ஸ்அப் எண் 7598507203 அல்லது இ-மெயில் rpo.trichy@mea.gov.in ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
Comments