திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் சாா்பில், பல்வேறு சமூக பொறுப்பு நிகழ்வுகள் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வை, கல்லூரி பொருளாளா் எம்.ஜே. ஜமால்முகமது, தொடக்கி வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக, அமைப்பின் மாணவா்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மாநகரின் போக்குவரத்து போலீசாா், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என சுமாா் 400 பேருக்கு மூன்றடுக்கு உள்ள முகக் கவசங்களை இலவசமாக வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் ஏ.முகமது இப்ராஹிம், பேராசிரியா் எஸ். சேக் இஸ்மாயில், அமைப்பின் ஆலோசகா் அ. ஜாகீா் உசேன், அமைப்பின் பொருளாளா் சா. முகமது சாகுல் ஹமீது ஆகியோா் வாழ்த்தி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
Comments