தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது குறித்து தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருதை அவர்கள் கூறுகையில், தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை காரணமாக வரும் 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக தமிழக முதல்வராக எளிமையாக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அவரின் ஆளுமையின் கீழ் தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது போல அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் 2010இல் தொடங்கப்பட்டது.கிட்டத்தட்ட 40 ஆயிரம் நபர்கள் உள்ளனர். 2006 முதல் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் பொழுது அவர்களுடைய சம்பளத்தில் பாதி அளவு ஓய்வூதியமாக வழங்கப்பட்ட போது திடீரென அதனை பங்கீட்டு முறையில் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
பங்குச் சந்தை மூலம் எங்களுக்கு அளிக்கப்படும் ஓய்வு ஊதியம் எப்போதுமே சரியான வரையறை இல்லாமல் இருந்ததால் இம்முறையைப் பின்பற்ற வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்.இந்த முறையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் எங்களுக்கு இம்முறையில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டாம் .மேலும் இப்பிரச்சினைை குறித்த பலமுறை ஏற்கனவே இருந்த தமிழக அரசுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குறுதியாய் அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் அவர்களுடைய பழைய முறைப்படியே வழங்கப்படும் என்று ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார் .அதன் அடிப்படையிலேயே விரைவில் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
Comments