மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறை தாக்குதலை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி உறையூர் குறத்தெருவில் பாஜக மாவட்ட செயலாளா் எம்பயா்.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமான மம்தாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாபி.கண்ணன், ராஜ்குமாா், தா்மராஜ், ராமலிங்கம் , நாகேந்திரன், ஸ்ரீ கணேசன் ஜி ஆகியோர் கலந்து கொண்டாா். பின்னர் பொதுமக்களுக்கும், கட்சி நிா்வாகிகளுக்கும் கபசர குடிநீா் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
Comments