Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இணையவழியில் நடனம் கற்றுத் தந்து அசத்தும்  திருச்சி   நடனப்பள்ளி 

நடனம் என்பது ஒரு கலையையும் தாண்டி நம் மனதை புத்துணர்ச்சியாக வைக்க  உதவும்  ஒரு உடற்பயிற்சியாகவும் உள்ளது. ஏதோ ஒரு சூழலில் நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு நடனத்தை பயன்படுத்தும் வகையில் நடனம் நம் உணர்வுகளோடு தொடர்புடையது. நடனத்தில் பல்வேறு வகைகள் இருந்தபோதிலும் மேற்கத்திய நடனத்தின் மீது உள்ள ஆர்வம் உலகின்  அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதன் மூலம் பல்வேறு நடன கலைஞர்கள், நடன இயக்குநர்கள்  உருவாகின்ன்றன  அந்த வகையில் திருச்சி கண்டனன் கன்டோன்மென்ட் பகுதியில் 7ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டீரிமர்ஸ் ஸ்டுடியோ Dreamersstudio இந்த கொரானா காலகட்டத்திலும் ஆர்வம் மிகுந்தவர்களின்  நடனக்கலையை ஊக்கப்படுத்தும் விதமாக இணையவழியில் நடனப் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

கோடைக்கால சிறப்பு வகுப்பாக தற்போது 14 நாட்களுக்கு ஒரு சிறு முயற்சியாக தொடங்கலாம் என்று தொடங்கியிருக்கின்றோம்,
 முதல் இரண்டு நாட்கள் எவ்வாறு இதை கையாள்வது எப்படி நடனம் கற்றுத்தருகிறோம்  பற்றிய விரிவுரை ஆகத்தான் இருக்கிறது அடுத்த பத்து நாட்கள் ஒரு பாடலுக்கு மூன்று நிமிடத்தில் நடனம் ஆடுவதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையிலேயே பயிற்சிகள்  அளிக்கப்பட்டு வருவதாக நடனப் பள்ளியின் நிறுவனர் சதிஷ் அவர்கள் கூறியுள்ளார்.
 மேலும் அவர் கூறுகையில், நடனம் என்பது நம் வாழ்வோடு இணைந்த ஒரு  கலை கொரானா காலம் என்பதால் மாணவர்களின் நடன திறமையை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தபோது இணைய வழியில் தொடரலாம் என்று   முதலில் சந்தித்த போது பல்வேறு தயக்கங்கள் ஏற்பட்டன.நடனத்தை  பொறுத்தவரை அதுவும் குறிப்பாக முறையாக கற்றுக் கொள்பவர்களுக்கு சரியான இட வசதி என்பது மிக முக்கியமான ஒன்று அவர்களின் நடனத்தின் அவர்களுடைய உடல் அசைவுகளை நேரடியாக பார்ப்பதைப் போல் தெளிவான  பயிற்சியை வேறு வழியில்  அளிக்க இயலாது. ஆனாலும் ஒரு சவாலாக இதை செய்யலாம் என்று முடிவு எடுத்து என்னோடு  ஐந்து நபர்கள் இந்த குழுவில் உள்ளனர் . நடனத்தை பயிற்சி செய்து வீடியோகவாக பதிவுசெய்து அதை  மாணவர்களுக்கு எவ்வாறு எளிமையான முறையில் அளிக்க வேண்டும் என்று ஒரு குழுவாக இணைந்து செயல்படுத்தி வருகிறோம். 

மாணவர்களின் உற்சாகமும் ஆர்வமும் இல்லாமல் எவ்வகையிலும் எங்களால் இதை முன்னெடுத்துச் செல்ல இயலாது மாணவர்களின் ஆர்வமே  இதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் ஜூன் மாதத்திற்கு பிறகு இதனை தொடர்வகுப்புகளாக நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
 எந்த வகையில் கலையை கற்றுக் கொடுத்தாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருப்பின் அதில் பங்கு கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தான் இருக்கும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் ஏன்  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்  வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் கற்றுக் கொள்ள விரும்பி எங்களோடு இணைந்து இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 எங்கள் நடனப்பள்ளியின்  இன்ஸ்டாகிராம் பக்கத்தை  45000க்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்கிறார்கள் .
  இந்த பக்கத்தினை பார்த்துவிட்டு   பல்வேறு நாடுகளிலிருந்து எங்கள் நடன பள்ளியில்  நடனம் கற்றுக் கொள்வதற்காக ஆர்வத்தோடு எங்களை அனுகியவர்களுக்கும்   ஒரு தளமாக இந்த இணையவழி கற்றல் என்பது இருக்கும் என்பதை நம்புகிறேன் என்கிறார் சதிஷ்.

                                  சதிஷ்

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *