பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த வளர்மதியின் சகோதரர் மனோகரன். இவர் உறையூர் மின்னப்பன் தெருவில் வசித்து வந்தார் வருகிறார். இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்த பட உள்ள நிலையில் மனோகரன், சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதற்காக வீட்டில் அதிகளவு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் உறையூர் காவல் ஆய்வாளர் மாரிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மனோகரன் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 10 பெட்டிகளில் இருந்த 480 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 63,360 ஆகும்.
அவரை கைது செய்த போலீசார் உறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப் பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
Comments