நேற்று(8.05.21) துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர் அப்போது ஒரு பயணி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது டார்ச் லைட் பேட்டரியில் மறைத்து எடுத்து வந்த இரண்டு தங்க குச்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பயணி எடுத்துவந்த தங்கத்தின் அளவு 1.25 கிலோ எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 60 லட்சம் என தெரியவந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments