கொரானா எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல முறைகளில் பல தொண்டு நிறுவனங்களும் பல சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அவ்வவகையில் திருச்சி மாநகர தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் அண்ணாசிலை அருகில் பொதுமக்களுக்கு முக கவசம் நோயெதிர்ப்பு கசாயம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கி உள்ளனர்.
இது குறித்து சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆரிப் கூறுகையில் எங்களால் இயன்ற அளவிற்கு எவ்வகையில் மக்களுக்கு உதவிட முடியுமோ அதனை சிவகார்த்திகேயன் நற்பணி மன்றம் சார்பில்செய்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கான அண்ணாசிலை சாலையோர மக்களுக்கும் கடைகளுக்கும் சென்று முக கவசம் நோயெதிர்ப்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி போன்றவற்றை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நற்பணி மன்றம் மாவட்ட தலைவரும் பகுதி நிர்வாகிகளும் சேர்ந்து வழங்கியுள்ளோம் சில நாட்களுக்கு முன்பு ஏபிஜே அப்துல்கலாம் நினைவாகவும பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவாகவும் நூறு மரக்கன்றுகளையும்கிராமப்புற மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
மக்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் எங்களால் இயன்ற உதவியை செய்வதே எங்களுடைய தலையாய கடமையாக கருதுகிறேன் என்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments