திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லரி நகை கடையின் ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் , கார் ஓட்டுநர் பிரசாந்த் ஆகியோர் கடந்த 8 ம் தேதி சென்னையில் 1.5 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்து காரில் எடுத்து வரும் போது உழுந்தூர்பேட்டை அருகே வந்த போது நகை கடை ஊழியர் மார்டீன் ஜெயராஜை உடன் சென்ற டிரைவர் பிரசாந்த் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கார் மற்றும் 1.500 கிலோ நகையுடன் கடத்தி கொலை செய்து உடலை மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் கிராமத்தில் புதைத்து கொலையாளிகள் தப்பியோடினர்.
நகை கடை உரிமையாளர் மதன் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் காவல் ஆய்வாளர் மணிராஜ் வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் மாம்பலசாலை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரசாந்த் இவரது நண்பர் கிழகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொன்னர் மகன் பிரசாந்த் ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த 1.300 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.
நகைக் கடை ஊழியரின் கார் மற்றும் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் கிராமத்தைச் சேர்ந்த கொலையாளிகள் விக்ரம், செல்வகுமார், அரவிந்த், அறிவழகன், பிரவின் மேலும் 5 பேரை உறையூர் போலீஸார் தேடி கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சில அதிர வைக்கும் தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்தது.மார்ட்டின் 8ம்தேதி(08.05.21) சென்னையில் தங்கத்தை வாங்கிக் கொண்டு பிரசாந்துடன் காரில் வந்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே தனக்கு சிறுநீர் வருவதாக கூறி காரை நிறுத்தி வெளியில் சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி பின்தொடர்ந்து வந்த விக்ரம், செல்வகுமார்,அரவிந்த் உள்ளிட்ட ஆறு பேரும் மார்ட்டின் அமர்ந்திருந்த காருக்குள் வந்து அவரது கழுத்தை நெறித்து கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளனர் .
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாட்டின் உடலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அதே காரில் இந்த ஆண் 6 பேரும் பயணம் மேற்கொண்டனர். பிரசாந்த் வழக்கம்போல் இவர்கள் வந்த கார் மற்றும் நகையும் எடுத்துக்கொண்டு திருச்சி வந்து விட்டார். இவர்கள் 5 பேரும் அழகிய மணவாளத்தை சேர்ந்தவர்கள் மண்ணச்சநல்லலூர் அருகே உள்ள இந்த ஊரில் கொலைசெய்து திட்டமிட்டபடி எங்கு புதைக்க வேண்டுமோ அங்கு கொண்டுவந்து அவரது உடலை புதைத்துவிட்டனர். ரத்தக்கறை படிந்த இவர்களுடைய உடைகளையும் எரித்துள்ளனர். பிரசாந்தின் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி மார்ட்டினை திட்டமிட்டு இந்த படுகொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments