Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வழக்கறிஞர் கொலை சம்பவத்தில் 7 பேர் கைது

திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் நேற்று முன்தினம் தனது 5 வயது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் கோபி கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். நடுரோட்டில் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அமர்வு நீதிமன்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஹேமந்த் என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் கோபி கண்ணன் பெயரும் இடம் பெற்றிருப்பதும், அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கூலிப்படையினர் துணையுடன் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரை வெட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பதிவின் அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஹேமந்த் குமாரின் சகோதர் பிரிஜேஸ் பிரசாந்த் (22) மற்றும் கோவையை சேர்ந்த சுரேஷ் (20), திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த சித்திக் (16), அருண் (20), உதயகுமார் (23),  நல்லதம்பி (27) ஆகிய 7 பேர் சேர்ந்து கோபி கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அனைவரையும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஒயாமாரி சுடுகாடு எதிரிலுள்ள காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டது.

மேலும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பினனர் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *