தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும், அந்த நிதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இயலும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி கொரோனா நிவாரண நிதிக்காக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி தனலட்சுமி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சுராஜ் ஆகியோர் தங்களுடைய சேமிப்புத் தொகையில் இருந்து 1966 ரூபாயை திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments