கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரகனேரி நியாயவிலை கடைகளில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி தொகையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்…
கொரோனா நிவாரணம் முதல் தவணை தற்போது வழங்கும் பணி துவங்கி உள்ளது. இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும். பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு நிச்சயம் நடைபெறும் இதுகுறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்துக் கேட்பு நடைபெற்று வருகிறது.
அனைவருமே 12ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம் என கருதப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று தாக்கத்தின் விளைவாக இனி வரும் காலங்களில் எப்படி இருக்கிறது? என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால் நிச்சயம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும் போது மாணவ மாணவிகள் எந்த துறையை தேர்ந்து எடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது. இங்கு நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒருவேளை அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் அரசை பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்கு தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியை பெற வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments