காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பாதாள சாக்கடையில் ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட 20 அடி ஆழ பள்ளத்தில் அவ்வழியாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் மண் சரிவு ஏற்பட்டு மண்ணில் புதையுண்டார்.இதனைக்கண்ட தொழிலாளர்கள் உடனடியாக திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து சரவணன் மற்றும் மைக்கேல் ஆர்தர் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 20 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மண்ணில் புதையுண்ட முதியவரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர்.அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதாள சாக்கடை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் விரைவாக வந்து முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments