ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
கொரனோ தொற்று பேரிடர் காலத்தில் அதனை எதிர்கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் உடனடி முயற்சியாக காந்தி மார்க்கெட் சந்தையை தற்காலிகமாக இடமாாற்றம்செய்யப்பட்டு உள்ளது.
மேலப்புலிவார் ரோடு பகுதியில் மே 16 முதல் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரம், காலை 6 மணி முதல் பகல்10 மணி வரை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.
மேலும் கொரனோ தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் காய்கறி விற்பனை நிலையங்களை நான்கு கோட்டங்களிலும் பரவலாக அமைத்து மக்கள் அதிகம் கூடா வண்ணம் தாங்கள் வசிக்கும் தெருக்களின் பகுதிகளிலேயே பொருட்களை வாங்கிக் கொள்கிற வகையில் அதற்கான திட்டங்களை விரைவாக தயார் செய்து நிறைவேற்றுமாறு திருச்சி மாவட்ட ஏஐடியுசி சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments