திருச்சி வரகனேரி இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பு பணிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறோம். இதுமட்டுமின்றி மக்கள் பணியிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரகனேரி இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வார காலத்திற்குள் இந்த வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு கால்வாய் சுத்தப்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளாக வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பலமுறை மனு கொடுத்தனர். அதிகாரிகள் இப்பணியை செய்ய தயாராக இருந்த போதும் ஆட்சியாளர்கள் ஒத்துழைக்கவில்லை.
தற்போது தூர் வாருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரெட்டை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. அதனால் ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புகளில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். எனிலும் அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் எதிர்த்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை அகற்றப்படும். இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை படரும் ஆரம்ப இடத்திலேயே இதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments