கொரோனா பரவலை தடுப்பது, ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகர காவல் ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் 17.05.2021 அன்று மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் நான் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக என் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த நேரத்தில் கொரனா பேரிடரை சமாளிக்கும் பொருட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் பொது நல சங்கங்களான ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், யுகா அமைப்பு மற்றும் வாசுகி அறக்கட்டளை ஆகிய நிர்வாகிகளுடன் போதிய உதவிகளை தங்கள் அமைப்பின் சார்பாக மாவட்ட மக்களுக்கு செய்ய வேண்டுமென கோரிக்கையுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அதிகாரிகள் வருகை தந்தனர்.
கொரனா காலத்தில் மக்கள் உயிரை காக்கின்ற வகையில் சேவை மனப்பான்மை உள்ள ஒற்றைக்கருதுள்ள நபர்கள் சந்திக்கும் ஆலோசனை கூட்டம் என்பதால் அதிகாரிகள் தாங்களும் இந்தக்கூட்டத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மற்றபடி இந்த கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல அதை நடத்துவதற்கு நான் அறிந்த வகையில் அரசு ஊழியர் என்ற முறையில் என்னுடைய அலுவலகத்தில் நடத்த அனுமதியில்லை என்பதை நான் அறிந்தவன்.
சில பத்திரிககைளில் செய்தி வந்தவாறு முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments