திருச்சி மாவட்டத்தில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் கடந்த 2 நாட்கள் திருச்சி மாவட்ட சுற்றிவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் ஒருபகுதியாக உப்பிலியபுரம் அடுத்த பச்சபெருமாள்பட்டி, எரகுடி, ரெட்டியாபட்டி பகுதிகளில் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட பெரும்பாலான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடைகள் திறப்பு நேரம் குறைவு மற்றும் சுபகாரியங்கள் நடைபெறாததால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது வீசிய சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments