திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் ரவுண்டானா அருகில் திருச்சி வெங்காய தரகு மண்டி இயங்கி வருகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட கமிஷன் மண்டி வியாபாரிகள் உள்ளனர். அங்கு உள்ள 10 வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக வருகிற 24-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வெங்காய கமிஷன் மண்டி மூடப்படும் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் வெங்காய மண்டிகள் இயங்காது என வியாபாரிகள் அறிவித்து இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் 7 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விவசாயி என்பதற்கான சான்றிதழை பதிவு செய்து இந்த உழவர் சந்தைகள் சின்ன வெங்காயம் விற்பனை செய்யலாம் என வேளாண் துணை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments