Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

கொரோனா  நோயாளிகளுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் பிரியாணி வழங்கும் விளையாட்டு வீரர்

இயற்கை பேரிடர்கள் வரும்பொழுது தான் நம்மிடம் இருக்கும் மனித நேயம் வெளிப்படுகின்றது.
 இன்றைக்கு கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவகைகளில் தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் உதவி செய்து வருகின்றனர்.

உணவு , மருத்துவ உபகரணங்கள் என்று ஒவ்வொரு வகையில் உதவி வருகின்றனர்.
அந்த வரிசையில் திருச்சி காஜாநகர்  குடிசைப் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரரான வெங்கடேஷ் அவர்கள் கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு இன்றைக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கவுள்ளார்.
 திருச்சி விஷன்  வெங்கடேஷிடம் பேசிய போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் என்று உள்ளேன் இதன்மூலம் திருச்சியில் சிலகாலம் பயிற்சியாளராக இருந்து இன்றைக்கு தனியாக தொழில் செய்து வருகின்றேன்.
 இந்த விளையாட்டு வீரர் என்ற அடையாளத்தால்  கிடைத்த நண்பர்களே இன்றைக்கு நான் செய்யும் உதவிக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்கிறார். 

இந்த மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நம் உதவிட வேண்டும் என்று நான் நினைத்த பொழுது என்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரங்கள் உதவிட முன் வந்தனர். தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் உணவு வழங்கலாம் என்று முடிவு செய்து உணவு வழங்க தொடங்கினோம்.

100 நபர்களுக்கு என்றும் தொடர்ந்து படிப்படியாக இன்றைக்கு 500 நபர்களுக்கு கிட்டத்தட்ட 11 நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆண்டு கூட ஊரடங்கில் என் பகுதியில் வசிக்கும்  140 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினேன். ஆனால், ஒரு விதத்தில் உதவியாக இருந்தாலும்  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   முடிந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவு வழங்கலாம் என்றும் அவர்களோடு  முன்கள பணியாளர்களுக்கும் உதவிட  நினைத்தேன்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் கோவை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உறவினர்களுக்கும் தினம் ஒரு சத்தான கீரையுடன்,முட்டையும் சேர்த்து உணவு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை எப்போதும் போல் வீடுகளில் இருப்பதுபோல்  ஒரு மன நிலையை உருவாக்குவதற்காக இன்றைக்கு 500 நபர்களுக்கு  சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
 இதில் சுற்று வட்டார நண்பர்கள் ஒருபுறம் உதவ என்னோடு இணைந்து என் பகுதி இளைஞர்கள்  தன்னார்வலராக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை பகுதிகளுக்கு சென்று வருவதால் என்னுடைய குடும்பத்தாருக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

குடும்பத்தினர்  காலையிலிருந்தே இந்த உணவு தயார் செய்வதில் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் அவர்கள்  செய்து முடித்த பின்னர் அதனை கொண்டு சேர்ப்பதே என்னுடைய பணியாக வைத்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு 140 குடும்பங்களுக்கு பண உதவி செய்ததை விட இந்த ஆண்டு முகம் தெரியாத நபர்களுக்கு உதவிடும் பொழுது மனம் மிகவும் நிறைவடைகிறது என்கிறார் வெங்கடேஷ்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *