ஸ்ரீரங்கம் தாலுகா ஏகிரி மங்கலத்தை சேர்ந்த வாசுகி என்ற இளம் பெண் தன் உறவினரை பார்க்க ஸ்ரீரங்கம் வந்துள்ளார் , சுப்பிரமணியபுரம் பகுதியில் வண்டியில் சென்று போது கண்ணாடி மீது நின்ற பாம்மை கண்டு அலறி வண்டியில் இருந்து இறங்கினார். அப்போது அருகில் நின்றவர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர் . தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர், ஏட்டுகள் மூத்தியா , குணசேகரன் , தீயாமணி கண்டன் , சுரேஸ் , பசுபதி ஆகியோர் வந்தனர்.
இருசக்கர வாகனத்தை நிறுத்தி சாலையில் படுக்க வைத்தனர். குச்சியை வைத்து அடித்த போது கட்டுவிரியன் பாம்பு தலை நீட்டிய போது பிடிக்க முயற்சி செய்த போது மீண்டும் வாகனத்தின் உள்ளே சென்றது.பின்னர் வாகனத்தின் முன் பாகத்தை பிரித்து கைபிடியில் இருந்த பாம்பை லாவகமாக தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்றனர்.
இளம் பெண் ஒருவர் இருசக்கரவாகனம் ஓட்டிச் செல்லும் போது வாகனம் கண்ணாடியில் ஏறி சீறிய கட்டு விரியன் பாம்பை சுமார் 1 மணி நேரம் போராடி 1 1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments